இலங்கை

நாடாளுமன்ற தேர்தல்: நிராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள்!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பனர்கள் பலருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சயின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டாரவுக்கு இம்முறை வேட்புமனு வழங்கப்படவில்லை.

முன்னாள் அமைச்சரான பெஸ்டஸ் பெரேராவின் மகன் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, முன்னாள் அமைச்சர் எஸ்.டீ.ஆர். ஜயரதன்வின் மகன் முன்னாள் துணை சபாநாயகர் மற்றும் முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் பிரியங்கர ஜயரத்னவுக்கும் இம்முறை எந்தவொர கட்சியிலும் வேட்புமனுவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரியங்கர ஜயரத்ன புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்காக புத்தளம் மாவட்டத்தில் தலைமைத்துவத்துடன் செயற்பட்டார்.

பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்தை பிரநிதித்துவப்படுத்திய தயாஸ்ரீத திசேரா, சாந்த அபேசேகர மற்றும் விக்டர் அன்டணி ஆகியோரும் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு ஆதரவு வழங்கிய வடமேற்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கும் அம்முறை எந்தவொரு கட்சியிலும் வேட்புமனு கிடைக்கவில்லை.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட சிலாபம் விக்டர் அன்டணி பியன்வலவுக்கும் எதிர்வரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எந்தக் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்கள் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.