கனடாவில் வேலையின்மை கடந்த செப்டெம்பர் மாதம் 6.5% ஆகக் குறைந்தது!
கனடாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் எதிர்பாராத விதமாக கடந்த செப்டெம்பர் மாதம் வீழ்ச்சியடைந்தது.செப்டம்பர் மாதத்தில் பொருளாதாரம் 47,000 வேலைகளைச் சேர்த்ததாக கனடா புள்ளிவிவரங்கள் வெள்ளிக்கிழமை (11)தெரிவித்தன.
அதேநேரத்தில் வேலையின்மை விகிதம் 0.1 சதவீத புள்ளிகள் குறைந்து 6.5 சதவீதமாக இருந்தது. 2024 ஜனவரிக்குப் பிறகு வேலையின்மை விகிதம் குறைவது இதுவே முதல் முறை என்று கனேடிய பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
முழு நேர வேலை வாய்ப்பும் 2022 மே மாத்துக்கு பின், அதன் மிகப்பெரிய இலாபத்தைக் கண்டது. கனடாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேலையின்மை விகிதம் படிப்படியாக அதிகரித்து, 2024 ஆகஸ்டில் 6.6 சதவீதத்தை எட்டியிருந்தது.
அந்த மாதத்தில் பணவீக்கம் இரண்டு சதவீதமாக இருந்தது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக கனேடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை இந்த ஆண்டு மூன்று முறை குறைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.