பலதும் பத்தும்
மேற்குத் தொடர்ச்சி மலை உருவாக்கம்..
குஜராத் மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் உருவாகிறது அங்கிருந்து மகாராஷ்டிரா கோவா கர்நாடகா வழியாக தமிழ்நாடு கேரளா எல்லையில் முடிவடைகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளின் மொத்த நீளம் சுமார் 1600 கிலோமீட்டர் தூரம் ஆகும்
உலகத்தில் உள்ள எந்த மலைகளுக்கும் இல்லாத சிறப்பு மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மட்டுமே உண்டு.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும்தான் சோலை காடுகள் மூலம் சுனைகள் உருவாகி அதன் மூலம் நீர் கசிந்து அந்த நீர் ஓடைகளாக உருவாகி அது அருவியாகவும் ஆறாகவும் பாய்ந்தோடுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகள் பலவகையான கனிம வளங்களை கொண்டுள்ளது பல்லுயிர்கள் வாழும் இடமாக விளங்குகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைகளை யுனெஸ்கோ அமைப்பு இந்தியாவின் பொக்கிஷமாக அறிவித்துள்ளது.