ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் சடுதியாக அதிகரித்த எச்.ஐ.வி: 87 நோயாளர்கள் அடையாளம்
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் துரிதமாக அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மாவட்ட பால்வினை நோய் தடுப்பு பிரிவின் வைத்திய அதிகாரியொருவர் அம்பலாங்கொடை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற மருத்துவ முகாமொன்றில் கலந்துகொண்ட போதே ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்திருந்தார்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இதுவரையில் 21 பேர் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியிருப்பது இனங்காணப்பட்டுள்ளதோடு, இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாவட்டத்தில் மொத்தம் 87 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் இன்னும் அடையாளம் காணப்பட வேண்டியவர்கள் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எச்.ஐ.வி தொற்றானது குணப்படுத்த முடியாத நோயல்ல. நோய்க்குறி ஆரம்ப நிலையில் இருக்கும்போதே சிகிச்சைகள் மூலம் குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.