சீன இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க் கப்பல் கொழும்பு வருகை
சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் பாய்மரப் பயிற்சிப் போர்க்கப்பலான ‘PO LANG’ நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
‘PO LANG’ வகை பாய்மரப் பயிற்சிக் கப்பல் 86 மீற்றர் நீளம் கொண்டதுடன் 35 பயிற்சி உத்தியோகத்தர்கள் உட்பட மொத்தம் 130 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
இந்த கப்பலின் தளபதி கமாண்டர் மா வென்யோங் மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றது.
இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளனர்.
மேலும் கப்பலின் செயல்பாட்டு செயல்திறன் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவூட்டும் வேலைத்திட்டம் கப்பலில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு ‘PO LANG’ என்ற பயிற்சி பாய்மரப் போர்க்கப்பல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை புறப்பட உள்ளது.