டைட்டானிக் விபத்து: கடல் நீரின் குளிர்ச்சியை உணர்ந்த மக்கள்
1912ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி டைட்டானிக் கப்பல் விபத்துக்குள்ளாகி பல பேரின் உயிரைக் காவு வாங்கியது.
இச் சம்பவம் காலத்தால் அழிக்கமுடியாத துயரங்களில் ஒன்று.
டைட்டானிக் கப்பல் மூழ்கிய மாலை வேளையில் கடல் நீரின் வெப்பநிலை -2 டிகிரி செல்சியஸாக இருந்துள்ளது.
இந்த குளிர்ந்த நீரில் ஒருவர் விழுந்தால் 15 நிமிடங்களுக்குள் மரணித்துவிடுவார்.
டைட்டானிக் சம்பவத்தை நினைவு கூறும் வகையில், அமெரிக்காவின் டென்னசியில் அமைந்துள்ள டைட்டானிக் அருங்காட்சியத்தில் 400க்கும் அதிகமான உண்மையான டைட்டானிக் நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அருங்காட்சியகம் கப்பலின் அறை வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 22,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தனித்துவமான ஒரு விடயம் உள்ளது.
டைட்டானிக் விபத்து நடந்த அன்று கடல் நீரின் குளிரை பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதற்காக, ஒரு பாத்திரத்தில் -2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.
அதில் பார்வையாளர்களால் எவ்வளவு நேரத்துக்கு கைகளை வைத்திருக்க முடிகிறது என்பது பார்க்கப்படுகிறது.
அதில் கை வைத்த பலர் வெறும் 20 செக்கன்கள், 8 செக்கன்களில் மெய் சிலிரித்து கைகளை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இது கப்பல் மூழ்கிய இரவு அதில் பயணம் செய்தவர்கள் கடல் நீரில் குளிரில் எவ்வளவு போராடியிருப்பார்கள் என்பதை கண்முன் கொண்டு வருகிறது.