தைவானில் தேசிய தினம்; மிரட்டும் வகையில் சீனா போர்ப் பயிற்சி
அவர் உரையாற்றிய பின்னர், தைவான் அருகில் சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் இருப்பதாகத் தைவானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தைவானைத் தனது ஒரு பகுதியாக சீனா கருதி வருகிறது. என்றாலும், இதைத் தைவான் மறுக்கிறது. தைவானிய அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பிரிவினைவாதச் செயல்களாக சீனா கருதுகிறது.
இதனால் தைவானை தமது பகுதியாக சீனா கருதி தொடர்ச்சியாக தென் சீன கடல் பரப்பில் போர் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிராக அமெரிக்கா உட்பட பல நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன. ஸ்ரீ
ஜனாதிபதி லாய்யின் தேசிய தின உரையை எதிர்க்கும் நோக்கிலேயே தைவானைச் சுற்றி சீனா போர்ப் பயிற்சியில் ஈடுபடக்கூடும் தைவான் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம், தைவானின் ஜனாதிபதியாக லாய் பதவி ஏற்ற பின்னர் சீனாவுடனான முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் தைவானைச் சுற்றி சீனா அடிக்கடி போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.