பலதும் பத்தும்
புகைப்பிடிப்பதால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: புறக்கணிக்கப்படும் எச்சரிக்கைகள்!
புகைப்பிடித்தல் காரணமாக நாட்டில் வருடாந்தம் சுமார் 20,000 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹீபால தெரிவித்தார்.
புகைப்பிடிப்பதை நிறுத்தக் கோரி எத்தனை அறிவுரைகள் மற்றும் சுகாதார எச்சரிக்கைகள் வழங்கப்பட்டாலும் கூட மக்கள் அவற்றை புறக்கணிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் மதுபானம் மற்றும் ஆரேக்கியமற்ற உணவுப் பயன்பாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் வெளிப்படுத்தினார்.
சுகாதார சேவையைப் பெற்றுக் கொள்ளுதல் ஒரு உரிமை என்றும், எனினும் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புக்களை தடுக்கவும், சுகாதாரப் பாதுகாப்புக்காக செலவிடப்படும் அரசாங்கத்தின் தேவையற்ற பணத்தை சேமிக்கவும் பொதுமக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.