சுத்தமான நெய்: எப்படி கண்டுபிடிப்பது?
நெய் என்பது மணத்துக்காகவும் சுவைக்காகவும் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருள்.
நெய்யில் விட்டமின் ஏ,டி,ஈ, கே போன்ற சத்துக்கள் உள்ளன.
இவையனைத்தும் கரையும் கொழுப்புக்கள். இதனால் உடல் எடை அதிகரிக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும் சுத்தமான நெய் எதுவென்று கண்டுபிடிப்பதில் சிலர் சவாலைச் சந்திக்கின்றனர்.
அதனை கண்டுபிடிப்பதற்கான சில எளிய வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.
சுத்தமான நெய் அறை வெப்பநிலையில் உருகக்கூடியது.
சிறிதளவு நெய்யை எடுத்து உள்ளங்கையில் வைத்து பார்க்கவும். சிறிது நேரத்தில் உள்ளங்கையில் வைக்கப்பட்ட நெய் உருகினால் அது சுத்தமான நெய் ஆகும்.
அல்லது ஒரு பாத்திரத்தில் நெய்யை ஊற்றி சூடுபடுத்தும்போது அது உருகி கபில நிறத்துக்கு வந்தால், அது சுத்தமான நெய்.
ஒரு திரியை நெய்யில் தோய்த்து விளக்கேற்றுங்கள். சுத்தமான நெய் என்றால் நீண்ட நேரம் விளக்கு எரியும்.