பலதும் பத்தும்
சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா?: படிப்படியாக சிறிய நட்சத்திரமாக சுருங்கும்
முழு சூரியக் குடும்பத்தின் மையமாக சூரியன் உள்ளது. ஆனால், சூரியனின் ஆயுட்காலம் எவ்வளவு என என்றாவது சிந்தித்ததுண்டா?
நட்சத்திரங்களைப் போலவே சூரியனுக்கும் வயது இருக்கிறது.
4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான சூரியன் தற்போது அதன் வாழ்வின் நடுப்பகுதியில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சூரியனின் உள்ளே ஹைட்ரஜன் எனும் அணுக்கள் ஒன்றிணைந்து ஹீலியத்தை உருவாக்குகின்றன.
இதனால் சூரியன் பிரகாசிக்குகிறது. சூரியனின் உட்புறத்திலிருக்கும் ஹைட்ரஜன் குறையும்போது அது சிவப்பாக மாறும்.
இது Red giant நிலை என அழைக்கப்படுகிறது.
அதன்பின் படிப்படியாக சிறிய நட்சத்திரமாக சுருங்கும் என கூறப்படுகிறது.
முழுமையாக ஹைட்ரஜன் தீர்ந்த பின்னர் 3 பில்லியன் ஆண்டுகள் நட்சத்திர மரணத்தின் நிலைகளை சூரியன் கடந்து செல்லும் எனக் கூறப்படுகிறது.