பலதும் பத்தும்
உள்நோக்கி வளரும் கால் விரல் நகங்கள்: இந்த தப்பை மட்டும் செய்ய வேண்டாம்
நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளரும்.
இது அதிக வலியைக் கொடுப்பதுடன் வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கும் வழிவகுக்கும்.
இதனை ஓனக்கோ கிரிப்டோஸிஸ் என அழைப்பர்.
இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணங்கள்
- நகங்களை சரியாக வெட்டாமை
- நகங்கள் அசாதாரணமாக வளைந்தபடி வளர்தல்
- இறுக்கமான காலணிகள் அல்லது காலுறைகள் அணிதல்
- அடிபடுதல்
- அதிக பாரமான பொருள் கால் விரலில் விழுந்து அதனால் ஏற்பட்ட காயம்
- தவறாக நிற்றல் அல்லது நடக்கும் தோரணை
- மரபணு
- வியர்வை
- பூஞ்சைத் தொற்று
இதனை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள்
- நகம் வெட்டும் பொழுது வளைவு வரையில் செல்லாமல் நேராக வெட்ட வேண்டும்.
- விசாலமான பாதணிகளை அணிய வேண்டும்.
- தொற்றுக்கள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் வலி நிவாரணிகளைப் பயன்படுத்த வேண்டும்.
- தினமும் கால்களை 5 தடவைகள் 20 நிமிடங்களுக்கு வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்க வேண்டும்.
இந்த முயற்சிகள் பலனளிக்காவிட்டால் மருத்துவரை நாடவும்.