கைகளில் கட்டப்படும் கயிறு: என்னென்ன நன்மைகள் உண்டு?
கைகளில் சாமி கயிறு கட்டுவது குறித்து ஆன்மீகத்தில் என்ன கூறப்பட்டுள்ளது எனப் பார்ப்போம்.
சில கோயில்களில் பிரசாதத்துக்கு பதிலாக தரப்படும் கயிறுகளை கட்டிக் கொள்வார்கள்.
இவ்வாறு கயிறு கட்டிக் கொள்வதற்கு பல காரணங்கள் உண்டு.
ஒரு சிலர் வேண்டுதல் நிறைவேறுவதற்காக கட்டிக் கொள்வார்கள், தீய சக்திகள் அண்டக்கூடாது என்பதற்காக கட்டிக் கொள்வார்கள், இன்னும் சிலர் கெட்ட சொப்பனங்கள் வரக் கூடாது என்பதற்காக கட்டிக்கொள்வார்கள்.
ஒருவர் கைகளில் எத்தனை கயிறுகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளலாம். இதற்கு ரட்சை அல்லது காப்பு எனப் பெயர்.
சில கோயில்களில் கறுப்பு, சிவப்பு, மஞ்சள் நிற கயிறுகள் வழங்கப்படும். ஒருவரது ஜாதகத்தில் சூரிய திசை அல்லது சூரிய புத்தி நடக்கும்போது சிவப்பு நிற கயிறு கட்டிக்கொள்வார்கள். இதன்மூலம் திறமை மற்றும் சுறுசுறுப்பு இரண்டும் அதிகரிக்கும்.
அதேபோல் ஜாதகத்தில் சந்திர திசை மற்றும் சுக்கிர திசை நடக்கும் பட்சத்தில் வெள்ளை நிற கயிறு கட்டப்படும்.
அதேசமயம் புதன் திசை அல்லது புதன் புத்தி நடக்கும்போது பச்சை நிறக் கயிறு கட்டுவார்கள். பச்சை நிறக் கயிறு கட்டுவதன் மூலம் குபேரனின் ஆசி பெறலாம்.
மஞ்சள் நிறக் கயிறு குருவின் ஆசியைப் பெற்றுத்தரும்.
ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கயிறு கட்டிக்கொள்ள வேண்டும்.
அதேபோல், கோயில் கயிறு அல்லது மந்திரிக்கப்பட்ட கயிறு எதுவாக இருந்தாலும் அதன் சக்தி 21 நாட்களுக்கு மட்டுமே இருக்கும்.
அதற்கு மேல் அவற்றைக் கழற்றி ஓடும் நீர்நிலைகளில் வீசி விட வேண்டும். கயிறு தானாக அவிழ்ந்துவிட்டால் அதனை மறுபடியும் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.