இதய நோய்: இந்தியாவில் ஆண்டுக்கு 1.7 கோடி மக்கள் உயிரிழப்பு
இந்தியாவில் வருடந்தோறும் 1.7 கோடி மக்கள் இதய நோயால் உயிரிழப்பதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டொக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
‘உலக இதய நலன்’ தினத்தை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட குறிப்பில்,
உலகளாவிய ரீதியில் இதயநோயினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே செல்கிறது.
இதய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 29ஆம் திகதி உலக இதய நல தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு வருடமும் 1.7 கோடி மக்கள் இதய நோயால் உயிரிழக்கின்றனர். இது உலகளாவிய ரீதியில் 31 சதவீதமாகும்.
சர்க்கரை நோய், உணவு, உடற்பயிற்சியின்மை, அதிக உடல் எடை, உயர் இரத்த அழுத்தம், புகைப்பிடித்தல் போன்றன இதய நோயின் முக்கிய காரணிகளாக உள்ளன.
இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்கம் நோக்கில், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரச மருத்துவமனைகளில் புகையிலை கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி இதய நோய் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதனை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை மேற்கொள்ள உறுதி ஏற்போம்” எனவும் தெரிவித்துள்ளார்.