ஹிஸ்புல்லா இயக்கத்தின் அடுத்த தலைவர்; நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சஃபிதீன்
ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் அடுத்த தலைவராக ஹஷேம் சஃபிதீன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சஃபிதீன் சுமார் 32 ஆண்டுகள் ஹிஸ்புல்லாக்களின் தலைவராக இருந்த நஸ்ரல்லாவின் உறவினராவார்.
இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் சஃபிதீனும் கொல்லப்பட்டத்தாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் உயிருடன் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நஸ்ரல்லாவைப் போலவே இருக்கும் சஃபிதீன் ஹிஸ்புல்லா அமைப்பில் ஆரம்பம் முதலே இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.
ஈரானில் தனது படிப்பினை நிறைவு செய்த அவர் 1990 ஆம் ஆண்டு அவர் மீண்டும் லெபனானுக்கு அழைக்கப்பட்ட போது அவர் நஸ்ரல்லாவின் வாரிசாக நியமிக்கப்பட்டார்.
2017 ஆம் ஆண்டு அமெரிக்காவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட சஃபிதீன், ஹிஸ்புல்லாக்களின் அரசியல் விவகாரங்களை மேற்பார்வையிடுபவராக செயல்பட்டார்.
மேலும் சிரியாவை ஆதரித்ததற்காக சவுதி அரேபியாவால் இவர் கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டார்.