ஹிஸ்புல்லா தலைவர் படுகொலை; ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினம் பிரகடனம்
லெபானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பலியான ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துள்ள நிலையில் ஈரானின் உயர் தலைவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
மேலும் ஈரானில் ஐந்து நாட்கள் துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலால் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக பல ஆண்டுகளாக பொது வெளிக்கு வருகைத் தராதிருந்த நஸ்ரல்லா, மத்திய கிழக்கில் மிகவும் பிரபலமான மற்றும் செல்வாக்கு மிக்க நபராவார்.
நஸ்ரல்லாவின் உயிரிழப்பு வரலாற்றுத் திருப்புமுனை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவரது இறப்பு நஸ்ரல்லாவலால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதிக்கான நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டது, மத்திய கிழக்கில் முழு போர் பற்றிய அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளது.