பார்வை இல்லை என்றாலும் பார்க்க முடியும்!
நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களுமே சிறப்பு வாய்ந்தவை. குறிப்பாக கண்கள். அதன்படி பிறவியிலேயே பார்வைக் குறைபாடு உள்ளவர்கள், அல்லது விபத்தில் பார்வையை இழந்தவர்களுக்கு மீண்டும் பார்வையை கிடைக்கச் செய்யும் Blindsight எனப்படும் சிப்பை எலான் மஸ்க்கின் நியூரோலிங் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இந்த சிப் ஆனது, நாம் பார்க்கும் காட்சிகளை நமது கண்களிலுள்ள லென்ஸ் ஊடாக ரெட்டினோவல் எலட்ரிக் சிக்னலாக மாற்றும்.
மூளைக்கு கடத்தப்படும் அதிலுள்ள இலட்சக் கணக்கான நியூரோன்களால் காட்சியாக விரிகிறது.
இவை அனைத்தும் மூளையிலுள்ள Cortexஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்த Blindsight சிப் மூளையுடன் இணைக்கப்படும்போது மனித மூளை தூண்டப்பட்டு காட்சிகளாக விரிவடையும்.
இதன் மூலம் பார்வை இல்லாமலேயே பார்க்க முடியும். இந்த நவீன கண்டுபிடிப்புக்கு அமெரிக்காவின் மருத்து மற்றும் நிர்வாக அமைப்பான FDA அனுமதி அளித்துள்ளது.
இது மனித கண்டுபிடிப்புக்களிலேயே புது மாற்றத்தை செய்யும் என்பதில் சந்தேகமில்லை.