பலதும் பத்தும்
திருமண தோஷம் நீங்க…: பரிகாரங்கள் கைகொடுக்கும்
திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கியமான ஒரு விடயம். ஆனால், ஒரு சிலருக்கு திருமணம் மிகவும் தாமதமாகவே நடக்கும்.
இதற்கென சில பரிகாரங்கள் உள்ளன.
இதனை பின்பற்றுவதன் மூலம் திருமணம் நடப்பதற்கு தடையாக இருக்கும் அனைத்து பிரச்சினைகளும் நீங்குவதாக ஒரு நம்பிக்கை உண்டு.
- செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
- பசுவுக்கு புல், கீரை போன்றவற்றைக் கொடுத்து திருமண யோகத்தை வளர்த்துக் கொள்ளலாம்.
- ஏதேனும் ஒரு விநாயகர் கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை 43 நாட்கள் தொடர்ச்சியாக வழிபட வேண்டும்.
- சனி தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தான தர்மங்கள் செய்தால் சனி தோஷம் நீங்கும்.
- சுக்ல பக்ஷத்தின் முதல் வியாழக்கிழமை ஒரு ஜோடி ஏலக்காய், 5 வகையான இனிப்புகள், சுத்தமான நெய் விளக்கேற்றி தண்ணீர் வைத்து குருவை வணங்க வேண்டும். மூன்று வியாழக்கிழமைகள் தொடர்ச்சியாக இதனை செய்ய வேண்டும்.
- வியாழக்கிழமையன்று லக்ஷ்மி நாராயணன் கோயில் சென்று, விஷ்ணுவுக்கு கல்கி அர்ச்சனை செய்து நெய்யைக் கொண்டு தயார் செய்யப்பட்ட ஐந்து லட்டுக்களை சமர்ப்பித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 21 வியாழக்கிழமைகள் இதனை செய்ய வேண்டும்.
- திங்கட்கிழமை தவிர ஏனைய நாட்களில் நாக விரதம் 21 நாட்களுக்கு இருக்க வேண்டும்.
- ஏழைப் பெண்ணொருவரின் திருமணத்துக்கு முடிந்த அளவு பணம், பொருள், உதவி செய்ய வேண்டும்.
- வியாழக்ககிழமைகளில் மஞ்சள் நிற உடையணிந்து சிவனையும் பார்வதியையும் வழிபட வேண்டும்.