சகல நோய்களுக்கும் மருந்தாகும் சங்குப் பூ: தேநீராகவும் அருந்தலாம்
மலர்கள் என்றால் வெறும் மணத்துக்கும், அழகுக்கும் என்றுதான் நினைத்திருக்கிறோம். உண்மையில் பூக்களில் அதீத மருத்துவக் குணங்கள் நிரம்பியுள்ளன.
அதில் முதன்மையானது சங்குப் பூ.
வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் பூக்கும் இப் பூக்கள் பல நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
புற்றுநோய்
சங்குப் பூவில் காணப்படும் ஃப்ளேவனொய்ட்ஸ் புற்றுநோய் செல்களை உடலில் உருவாகாமல் தடுக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.
குடல் புண்
சங்குப் பூவில் குடல் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மற்றும் செரிமான கோளாறுகள், வயிறு எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது.
மன அழுத்தம்
சங்குப் பூவானது நரம்பு மண்டலத்தின் செயற்பாடுகளை சீர்படுத்தி பயம், தயக்கம், மன அழுத்தத்தை சரி செய்கிறது.
சர்க்கரை நோய்
இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சீர்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு பெரிதும் உதவும் இந்த சங்குப் பூ.
கொலஸ்ட்ரோல் குறைய
கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்கிறது. சங்குப் பூவில் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் நிறைந்துள்ளது.
காய்ச்சல்
உடலின் தட்ப வெப்பத்தை சீராக வைக்க உதவும்.
சங்குப் பூ தேநீர் எப்படி செய்வது?
தேவையான பொருட்கள்
- சங்குப் பூ – 5
- எலுமிச்சை சாறு – சிறிதளவு
- தண்ணீர் – இரண்டு கப்
- தேன்
செய்முறை
நீரை நன்றாக கொதிக்கவைத்து, அதில் சங்குப் பூவை சேர்த்து 5 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
பின் அவற்றில் சிறிதளவு எலுமிச்சை சாறு, தேன் சேர்த்து குடித்தால் நன்றாக இருக்கும்.
எச்சரிக்கை
மருத்துவரின் ஆலோசனை பெற்றே இத் தேநீரை குடிக்க வேண்டும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் குடிப்பது நல்லதல்ல.