பலதும் பத்தும்
குளிரிலிருந்து தப்பிக்க மறையாத சூரியனை உருவாக்கிய கிராமம்
குளிர் காலத்திலிருந்து காத்துக்கொள்ள ஒரு கிராமம் மறையாத சூரியனை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சூரியன் மிகவும் முக்கியமானது. கடும் குளிராக இருந்தால் அனைவரும் வெயில் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பார்கள். கடும் குளிர் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க ஹீட்டரை பயன்படுத்தலாம்.
எந்த ஒரு சாமானியனும் யோசிக்கக்கூட முடியாத ஒரு தீர்வை ஒரு கிராமம் கண்டுபிடித்துள்ளது. மறையவே செய்யதாத செயற்கை சூரியன்தான் அந்த தீர்வு.
இத்தாலி நாட்டில் உள்ள விக்னெல்லா கிராமம்தான் இந்த சாதனைக்கு சொந்தமான கிராமம். இது இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்து இடையே உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் மக்கள் விக்னெல்லாவில் குடியேற ஆரம்பித்தனர். இங்கு நவம்பர் 11 முதல் பிப்ரவரி 2 ஆம் தேதிவரையில் சூரிய ஒளி மிக மிக குறைவாகவே இருக்கும்.
இந்த நாட்களில் விக்னெல்லா கிராமத்தில் இருந்தால் ஏதோ அண்டார்டிகாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்த கிராமத்தில் 200 பேர் வசிக்கின்றனர். பல நூற்றாண்டுகளாக, சூரியன் மறைந்து, இரண்டரை மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தோன்றும் செயல்முறை இருந்து வருகிறது.
2005-ம் ஆண்டு சுமார் ரூ.1 கோடி திரட்டப்பட்டு, பின்னர் ஊர் எதிரே உள்ள மலையில் பிரமாண்ட கண்ணாடி அமைக்கும் பணி தொடங்கியது.
நவம்பர் 2006-இல், கிராம மக்கள் மலையின் மேல் 40 சதுர மீட்டர் கண்ணாடியை நிறுவினர். அதன் எடை 1.1 டன். இது 1100 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டது.
குறைந்த அளவு சூரிய ஒளி உயரமான இடத்தில் உள்ள கண்ணாடி மீது படும்போது அது ஒளியை எதிரொளிக்கும்.
இதன் அடிப்படையில் 2006 ஆம் ஆண்டு விக்னெல்லா கிராமம் முழுமையாக சூரிய ஒளியை பெறத் தொடங்கியது.
இப்பிரச்னைக்கு அங்குள்ள மக்கள் தீர்வு கண்ட விதம், உலகம் முழுமைக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.