சிறுவர்களை கோபக்காரர்களாக மாற்றும் கைக்கணினிகள்
சிறுவர்களிடையே மடிக்கணினிகள், கணினிகள், கைக்கணினிகள், தொலைபேசிகளின் பாவனை அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், கைக்கணினிகளை (Tablet) அதிகம் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிக கோபக்காரர்களாக இருப்பதாக கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
சொந்தமாக கைகணினிகள் வைத்திருக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 2013ஆம் ஆண்டில் வெறும் 7 சதவீதமாக இருந்தது. அதேவேளை 2020இல் 44 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவை பொறுத்தவரையில் 93 சதவீத பெற்றோர் தங்களில் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இவ்வகை சாதனங்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்றனர்.
பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த சாதனங்களுக்குள் இருப்பதால் சிறுவர்களின் விருப்பப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளன என்றாலும் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சிறுவர்கள் உள்ளனர்.
இரண்டு வயதில் தான் கோப உணர்வை கட்டுப்படுத்த குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். ஆனால், அந்த வயதிலிருந்தே குழந்தைகள் கைக்கணினிகளுக்குள் மூழ்கிவிடுகின்றனர்.
இதனால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் கூச்சலிடும் சுபாவம் கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர்.
இதுதொடர்பில், மூன்றரை வயதான சிறுவர்கள் கைக்கணினிகளை பயன்படுத்தும் ஒவ்வொரு 73 நிமிடத்துக்கும் அவர்களின் கூச்சலிடும் தன்மை அதிகரிப்பது தெரிய வந்தது.
அதேபோல் ஐந்தரை வயதான சிறுவர்களின் கைக்கணினி பயன்பாட்டில் ஒவ்வொரு 17 நிமிஷத்துக்கும் அவர்களின் கோபம் அதிகரிப்பது தெரியவந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.