1000 – 1500 கிமீ தூரத்தை தாக்கும் ஏவுகணைகள்; உக்ரைனுக்கு வழங்க நோட்டோ அழைப்பு
உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது தொடர்பாக உலக நாடுகளுக்கு நோட்டோ அழைப்பு விடுத்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையிலான மோதல் மூன்றாம் உலகப் போரை தூண்டும் அபாயத்தை உருவாக்கி வருகிறது.
இந்த பதற்றமானது, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் தங்கள் ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதி அளித்ததை அடுத்து நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனுக்கு 1000 முதல் 1500 கிமீ வரையிலான தாக்குதலை நடத்தக்கூடிய நடுத்தர தூர ஏவுகணைகளை வழங்க உலக நாடுகளுக்கு நோட்டோ அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் உக்ரைனுக்கு நடுத்தர ஏவுகணைகளை வழங்குவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து திட்டமிடும் தீர்மானத்தையும் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.
இதில், டோமாஹாக்(Tomahawk) ஏவுகணைகளும் அடங்கும், இந்த ஏவுகணைகளை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்பு கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
டோமாஹாக்(Tomahawk) ஏவுகணையானது நடுத்தர ஏவுகணை பிரிவில் அடங்கும்.