காகத்துக்கு படையல் வைக்கும்போது இதை மட்டும் செய்துவிடாதீர்கள்?
இறந்துபோனவர்களின் ஆத்மாக்கள் காகத்தின் உருவில் வீடு தேடி வருவதாக ஒரு நம்பிக்கையுள்ளது.
இதனால் அமாவாசை தினங்களில் காகத்துக்கு படையல் வைப்பார்கள். அந்த வகையில் காகத்துக்கு படையல் வைக்கும்போது ஒரு சில தவறுகளை செய்யவே கூடாது.
அசைவ உணவுகளை காகத்துக்கு படையல் வைக்கக்கூடாது. மீதமான உணவகளை வைக்கக்கூடாது. குளிக்காமல், அதேசமயம் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள நேரங்களில் சாதம் வைக்கவே கூடாது.
சில நேரங்களில் நீங்கள் வைக்கும் படையலை காகங்கள் சாப்பிடாமல் போகும். அதற்கு முன்னோர்கள் உங்கள் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாம்.
அதுபோல் காகம் கிழக்கு, தெற்கு பகுதியில் கரைந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்குமாம். தென்மேற்கு பகுதியில் கரைந்தால் பணவரவு கிடைக்கும்.
மேற்கு பகுதியில் கரைந்தால் மழை வரும். வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காகம் கரைந்தால் எதிர்பாராத நஷ்டம் வரும்.
காகத்துக்கு சாதம் வைக்கும்போது அசம்பாவிதங்கள் நெருங்காது. செய்வினை கோளாறுகள் நெருங்காது.
மேலும் காகம் கரைந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். துக்கம் தீரும்.