பத்மினியின் ஒரு ‘Mid shot’ஆல்’ கதி கலங்கிய மும்பை பட உலகம்
1970’களில் பத்மினி அவர்கள் நம் தமிழ் சினிமாவில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அவர் ஹிந்தியில் ‘மேரா நாம் ஜோக்கர்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.. அந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சியில், அவரது சட்டை கிழிந்து உடல் பாகம் தெரிவது போன்ற ஒரு காட்சியில் எவ்வித தயக்கமும் இன்றி துணிந்து நடித்தார்.
அந்தக்காட்சியை முதன் முதலில் திரையில் கண்ட இந்திப்பட உலகினர் ஸ்தம்பித்து போனார்கள். எப்படி சாத்தியம் இது? என்று படம் பார்த்த அனைவரும் வாயடைத்துப் போனார்கள். ரசிகர்களும் திரையில் இப்படி ஒரு காட்சியை கண்டதும் அதிர்ச்சியில்(?) ஆழ்ந்தார்கள். (ராஜ்கபூரின் படங்களில் பல நடிகைகள் மேலாடையை துறந்து நடிப்பவர்கள்தான் என்றாலும் பத்மினியை நம்பமுடியாமல் பார்த்தார்கள்) நம்மூர் அபூர்வசகோதரர்கள் குள்ள அப்பு’விற்கு இன்ஸ்பிரேஷன் இந்தப்படம் என்றும் சொல்லலாம்)
இந்தப் படம் மிகவும் நீளமாக இருந்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரம்.. இந்த படத்திற்குத்தான் “இரண்டு இடைவேளை”
விட்டார்கள். படம் ரிலீஸ் ஆன அன்றைய காலகட்டத்தில் இந்த “இரண்டு இடைவேளை” மிகவும் மோசமான ஒன்றாக கருதப்பட்டது. பத்திரிகைகளும், மக்களும் படத்தின் நீளத்தால் பொறுமை இழந்து, இந்தப்படத்தைப் புறக்கணித்தார்கள்.
பத்மினியின் இந்த ஒரு கவர்ச்சியான “ஷாட்டை” குறிப்பிட்டு, நிறைய பத்திரிகையாளர்கள் மிகவும் மோசமாக எழுதி தள்ளினார்கள். ஆனால் இப்படி ஒரு காட்சியில் பத்மினி நடித்திருக்கிறார் என்பதை இங்கிருந்த பத்திரிக்கைகள் பெரிதாக எழுதவே இல்லை.
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரும் தோல்வியை தழுவியது இந்த திரைப்படம். ஆனால் சில வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தை ட்ரிம் செய்து, ரீமாஸ்டரிங் செய்து வெளியிட்டார்கள். நம்பவே முடியாத ஒரு அதிசயம் நடந்தது. படம் ரிலீசான கால கட்டத்தில் பெரும் தோல்வியை தழுவிய இந்த திரைப்படம், மறுவெளியீட்டில் மிகப்பெரும் வெற்றியை அடைந்தது. வசூலை வாரி குவித்தது. இன்றளவும் இந்திய சினிமாவில் க்ளாஸிக் திரைப்படங்களில் ஒன்றாக “மேரா நாம் ஜோக்கர்” திகழ்கிறது.
“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்று இந்தக்கட்டுரைக்கு டைட்டில் வைத்திருந்தால் சரியாக இருந்திருக்குமோ என்னவோ…