Featureஇலங்கைகலைஞர்கள்நேசம் நாடும் நெஞ்சங்கள்
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் காலமானார்
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மலேசியாவின் கோடீஸ்வர வர்த்தகர் ஆனந்த கிருஸ்ணன் தனது 86 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
அவரது நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. தொலைத்தொடர்புதுறை எரிவாயு எண்ணெய் போன்றவற்றில் வர்த்தக சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனந்த கிருஸ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா டெலிகோமிலும் அவரது பங்குகள் உள்ளன.
யாழ்ப்பாணத்தை பூர்வீககொண்ட இவர் மலேசிய தலைநகரில் உள்ள பிரிக்பீல்டில் பிறந்தார்.
ஏகே என அழைக்கப்பட்ட இவர் உசாகா டெஹாஸ் யு கய் பவுண்டேசன் போன்றவற்றின் ஸ்தாபகர்.
2011 இல் இவரது சொத்து 5.8 பில்லியன் டொலர் என மதிப்பிட்டிருந்த போர்ப்ஸ் சஞ்சிகை உலகின் செல்வந்தர்களின் பட்டியலில் இவரை இணைத்திருந்தது.