‘MAL’ – புதிய இரத்த வகையை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்: 50 வருட ஆராய்ச்சியின் பலன்
பிரித்தானிய விஞ்ஞானிகள் ‘MAL’ எனும் புதிய இரத்த வகையை கண்டுபிடித்துள்ளனர்.
சுமார் 50 வருடக்கால ஆராய்ச்சியின் பலனாகவே இந்த இரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
A,B,AB,O எனும் இரத்த வகைகளுக்கும் மேலான ஒரு இரத்த வகையாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த இரத்த வகையை அடையாளம் காண்பதற்கு சுமார் 5000 பேரின் இரத்தம் ஆராயப்பட்டுள்ளது.
இந்த புதிய இரத்த வகை இரத்த தானம் மற்றும் இரத்தத்துடன் தொடர்புடைய செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களை உருவாக்கவும் அவசர மருத்துவ உதவிகளில் பயன்படும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் பொதுமக்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வை அதிகரிக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை இரத்தம் மனித உடலின் இரத்தவியல் தொடர்பான மேலதிக புரிதல்களுக்கு வழிகாட்டுவதோடு, மருத்துவம், அறிவியல் போன்றவற்றில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது எனவும் கூறப்படுகிறது.