பலதும் பத்தும்
இதோ வந்துவிட்டது யூடியூபிலும் ஏஐ வசதி: இனி ஈஸியா shorts செய்யலாம்
யூடியூப் வலைத்தளமானது மக்களின் விருப்பத்துக்குரிய ஒன்று.
அந்த வகையில் தற்போது யூடியூப் குறித்து புதிய அம்சம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் யூடியூப் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் பேசிய அந் நிறுவனத்தின் சி.இ.ஓ செயற்கை நுண்ணறிவின் மூலம் யூடியூபில் ஷொட்ஸ் செய்வதற்கு புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதாவது, ஏஐ மூலம் யூடியூப் ஷொர்ட்ஸில் பேக்ரவுண்டை மாற்றமுடியும்.
மேலும் ஆறு வினாடிகள் அளவுக்கு தனியாக ஷொர்ட்ஸ் உருவாக்கும் வசதி 2025ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடியோவுக்கான தலைப்பு, தம்னைல் (Thumbnail) ஆகியவற்றுக்கும் ஏஐ உதவி செய்வதோடு, ஏஐ தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்படும் வீடியோக்கள் மீது ‘ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது’ எனும் லேபலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.