40 வயதுக்குப் பின்னரும் இளமை தோற்றம் வேண்டுமா?; இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்
இளமையாக இருக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், 40 வயதுக்குப் பின்னரும் இளமையான தோற்றத்துடன் இருக்க முடியுமா என்று கேட்டால், அதற்கான பதில் ஆம். முடியும் என்பதே.
காரணம் ஒரு சில உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தால் நிச்சயம் நமது இளமை அதிகரிக்கும். அந்த வகையில்,
கீரைகள் – பழங்கள்
கீரைகளிலுள்ள ஆன்டி அக்சிடன்ட்டுகள், விட்டமின்கள், இரும்பு, கல்சியம் ஆகியவை சேதமடைந்த தோல் செல்களை சரி செய்யும்.
கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும். இதன் காரணமாக வயதான அறிகுறி வருவது தடுக்கப்படும்.
அதேபோல் பழங்களில் அப்பிள், ஒரேஞ்ச், மாதுளை போன்றவையும் வயதான அறிகுறியைத் தடுக்கும்.
க்ரீன் டீ
பொலிபினால்கள் மற்றும் கேட்டசின்கள் நிறைந்த க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. க்ரீன் டீயை பருகுவதன் மூலம் சூரிய ஒளியிலிருந்து சருமம் பாதுகாக்கப்படும. மேலும் தோலிலுள்ள சுருக்கங்கள், கரும் புள்ளிகள் போன்றவற்றையும் குறைக்க உதவும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் பீட்டா – கரோட்டின் போன்றவை உள்ளன. இது செல்களை மாற்றவும், பழுது பார்க்கவும், வறண்ட சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கவும் உதவும்.
தக்காளி
தக்காளியில் ஆன்டி அக்சிடன்ட்டுகள் உள்ளன. இது இளமைப் பொலிவை பராமரிக்கவும். மேலும் புற ஊதா கதிர்களினால் ஏற்படும் தாக்கத்தையும் குறைக்கும்.
யோகர்ட்
குடல் ஆரோக்கியத்தை சரி செய்ய யோகர்ட் மிகவும் உதவும். இதனால் தோல் ஆரோக்கியத்துடனும் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது.