உலகில் இதுவரை எவராலும் தீர்க்க முடியாத 10 மர்மமான கண்டுபிடிப்புகள்…
உலக வரலாற்றில் பல ஆச்சரியமான மர்மங்கள் அடங்கியுள்ளன. நம்மில் யாருமே அந்த மர்மங்களையெல்லாம் தீர்க்கும் வரை உயிருடன் இருக்க போவதில்லை. ஆனால் எப்பொழுதும் பூமிக்கடியில் புதைந்துள்ள பல விளக்க முடியாத வினோதங்களை பற்றி அறிந்துகொள்வதில் தான் அதிக சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. அப்படி கண்டுபிடிக்கப்பட்ட 10 வினோதமான விஷயங்களை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
1. The giant stone spheres of Costa Rica
இந்த மர்மமான உருண்டை வடிவிலான கல் அதன் வடிவமைப்பினால் மட்டும் மர்மத்தை ஏற்படுத்தவில்லை, அத்துடன் இது எங்கிருந்து வந்தது என்பதும் மிகப்பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆராய்ச்சி செய்த போது, இது பூமியை சேர்ந்தது இல்லை என்று கண்டறிந்துள்ளனர். இதை எப்படி கண்டறிந்தார்கள் என்றால் 1930-களில் பனாமா காட்டை சுத்தம் செய்யும் பொது இதை கண்டுப்பிடித்துள்ளனர். இது பூமியை சேர்ந்தது என்ற போதும்எப்படி இந்த அளவிற்கு துல்லியமாக வட்ட வடிவிலான கல்லை அந்த காலத்தில் எந்த ஒரு தொழில்நுட்ப உதவி இல்லாமல் செய்திருக்க முடியும் என்பது மர்மமாக உள்ளது.
2. Moa Birds:
1500-ம் ஆண்டுகளில் வாழ்ந்த இந்த பறவை நீயூஸ்லாந்தில் வாழ்ந்த பறக்க இயலாத பறவை. அங்குள்ள மௌரி மக்களின் கூற்றுப்படி இந்த பறவைகள் பல வழிகளில் கொல்லப்பட்டதால் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 20-ம் நூற்றாண்டின் போது ஆராய்ச்சியாளர்களால் இந்த பறவையின் காலின் ஒரு பகுதி கண்டறிப்பட்டது, ஆராய்ச்சியாளர்கள் அந்த காலை பதப்படுத்தி இன்று வரை பாதுகாத்து வருகின்றனர்.
3. The Temple Complex of Saksaywaman, Peru:
நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக, ஆனால் சிக்கலான அமைப்பை கொண்ட ஒரு கோயில் பெருவில் கட்டப்பட்டுள்ளது. இந்த சிக்கலான அமைப்பு கொண்ட கற்களில் நடுவில் ஒரு சிறிய பேப்பர் கூட நுழைய முடியாது, அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட கோயில் இது. இதன் நேர்த்தியான கட்டமைப்பை பார்த்து ஆச்சரியப்படாத ஆளே இருக்கமாட்டார்கள், ஆனால் இதை யார் கட்டியது என்று எவருக்கும் புரியாத புதிராக இன்று வரை இருந்து வருகிறது.
4. Gate of the Sun, Bolivia:
சூரியனின் நுழைவு வாயில் என்பது தைவாங்கு என்ற இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது, இந்த இடம் பொலிவியாவில் பழங்காலத்தை சேர்ந்த மிகவும் மர்மமான இடமாகும். அகழ்வாராய்சியாளர்களின் கூற்றுப்படி இந்த இடம் முதல் மில்லியனியம் ஏடி காலத்தில் ஒரு மிகப்பெரிய பேரரசின் மத்தியப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கல்லின் செதுக்கப்பட்டுள்ள உருவங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் இவை ஜோதிட அல்லது வானவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
5. The Longyou Caves, China:
இந்த குகைகள் ஆயிரக்கணக்கான மனிதர்கள் துளையிடப்பட்டு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் ஒரு இடத்தில் கூட இவ்வளவு கடினமான மற்றும் அழகான குகையை துளையிட்டவர்கள் யார் என்பதை பற்றிய குறிப்புகளை குறிப்பிடப்படவில்லை என்பதே ஆச்சரியமான உண்மை. வரலாற்றில் கூட இவற்றை பற்றிய எந்த ஒரு தடயமும் இல்லை என்பது மேலும் கிடைக்கும் தகவல்.
6. The Unfinished Obelisk, Egypt:
ஒபிலிக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த கட்டமைப்பு ஒரே கல்லில் செதுக்கப்பட்டது, இது மேற்பரப்பில் தென்பட்ட விரிசல் மூலமாகத்தான் கண்டுப்பிடித்தனர். இதை இந்த நிலையிலேயே விட்டு சென்றுள்ளனர், இதை பார்த்து அனைத்து ஆராய்ச்சியாளர்களும் ஆச்சரியபடுவதற்கு காரணம் அதன் வடிவமைப்பு மற்றும் பிரமாண்டமான வடிவமைப்பும் தான்.
7. The Underwater City of Yonaguni, Japan:
கடலடிக்கடியில் எதேர்ச்சியாக நீச்சல் செய்பவர்கள் நீச்சல் அடித்து செல்லும் போது கண்டுபிடிக்கபட்டது இது. இது அறியவியலுக்கே சவால் விட்டுக்கொண்டு இருக்கிறது. இந்த கடலடிக்கடியில் உள்ள பிரமிட் 10000 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கூறுகின்றனர். இந்த காலகட்டத்தில் எகிப்த் பிரமிட் கூட கட்டப்படவில்லை என்கின்றனர்.
8. Mohenjo-daro (’The Mound of the Dead’), Pakistan:
மிகவும் பிரமாண்டமான இந்த ஒரு நகரம் இண்டுஸ் நதியின் அருகே புதைந்திருந்ததை இந்தியன் அகழ்வாராய்சியாளர் 1922-ம் ஆண்டு கண்டறிந்தார். இந்த பிரமாண்டமான நகரம் எப்படி அழிந்தது, அப்படி என்ன நடந்திருக்கும் இந்த என்ற கேள்விக்கு இதுவரை பதில் என்பது அறியப்படவில்லை. இது போன்ற பல பகுதிகள் இந்த பூமியில் புதைந்துள்ளன, குறிப்பாக தமிழ்நாட்டில் கீழடி போன்ற இடத்தில் பண்டைய நாகரீக மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர், ஆபால் அதற்கான பதில் என்னவோ இதுவரை எட்டப்படாமல் உள்ளது.
9. L’Anse aux Meadows, Canada:
கனடாவில் உள்ள ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும் போது வைகிங் வாழ்ந்த இடத்தை கண்டறிந்துள்ளனர், இந்த இடமானது நார்த் அமெரிக்காவிற்கு சென்ற கொலம்பஸ் பிறப்பதற்கு முன்னாலையே இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
10. Stone-Age Tunnels:
இந்த கண்டுப்பிடிப்பு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்ட பூமிக்கடியில் உள்ள சுரங்கமாகும், இந்த சுரங்கமானது ஸ்காட்லாந்தில் இருந்து துருக்கிவரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த கண்டுப்பிடிப்புகளால் நம்முடைய முன்னோர்கள் வெறும் வேட்டையாடுபவர்கள் மட்டும் இல்லை என்பது விளங்குகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். மேலும் இந்த சுரங்கங்கள் பொதுவாக விலங்குகளிடம் இருந்தும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கும் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் இந்த சுரங்கத்தை பழங்கால மக்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.