பலதும் பத்தும்
ஜனவரி முதல் பியூட்டி பில்டர்ஸை நீக்குகிறது மெட்டா: ஏமாற்றத்தில் பயனர்கள்
புகைப்படங்கள் எடுக்கும்போது அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக ஃபில்டர் போட்டு எடுக்கின்றோம்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மெட்டா நிறுவனம் இந்த பில்டர் வசதியை வழங்கி வருகிறது.
இன்ஸ்டாகிராம்,ஃபேஸ்புக் போன்றவற்றில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் அழகை அதிகப்படுத்தும் வகையில் மெட்டா ஸ்பார்க் ஏஆர் எனும் மூன்றாம் தரப்பு இயங்குதளத்தை மெட்டா அறிமுகம் செய்தது.
ஒருபுறம் இந்த தொழில்நுட்ப வசதி பெரிதும் உதவினாலும் இன்னொருபுறம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வந்தது.
இதனை கருத்திற்கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதியிலிருந்து இந்த மூன்றாம் தரப்பு பில்டர் வசதி நீக்கப்படும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு பில்டர் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.