உலகம்
கனேடிய அரசாங்கத்தின் திடீர் தீர்மானம்: கடுமையாக்கப்படும் விதிகள்
கல்வி நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை ஆட்சேர்ப்பு செய்வதைக் குறைக்க கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனேடிய அரசாங்கத்தின் திட்டத்தின் படி, 2025ஆம் ஆண்டளவில் சர்வதேச ரீதியிலான மாணவர் சேர்க்கை 10 வீதமாக குறைக்கப்படும்.
இது 2023ஆம் ஆண்டில் இருந்து 36 வீதம் குறைவாகும்.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட நாட்டில் தற்காலிகமாக தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை குறைவதே இதற்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இதன் கீழ் பணிகளுக்கு அனுமதி பெறுவது தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.