உலகம்
தெற்கு சீனாவில் 10 வயது மாணவன் கொலை: கேள்வியெழுப்பும் ஜப்பான்
தெற்கு சீனாவில் 10 வயது ஜப்பானிய மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
அந்நாட்டு ஜப்பானிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் கொலையைச் செய்த 44 வயதுடைய சந்தேக நபர் சீனப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை.
இது தொடர்பான உண்மைகளை சீன அரசாங்கம் விளக்கமளிக்குமாறு கோரியுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா, சிறுவர்களை குறிவைத்து இவ்வாறான சம்பவங்கள் எந்த நாட்டிலும் இடம்பெறக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
சீனாவின் சில பகுதிகளில் வெளிநாட்டினரை இலக்கு வைத்து தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.