மோடி, வர்த்தக உறவுகளை துஷ்பிரயோகம் செய்பவர்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க விஜயத்தின் போது அவரை சந்திக்கவுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் தீவிர பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.
மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தவாரம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது அவரை சந்திக்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மோடி ஒரு அற்புதமான மனிதர் என்று கூறிய ட்ரம்ப், இந்தியாவில் வர்த்தக உறவுகளை பாரியளவில் துஷ்பிரயோகம் செய்பவர் என்றும் கூறினார்.
இந்தியா இறக்குமதிக்கு அதிக வரி விதிக்கிறது என்றும் ட்ரம்ப் இதன்போது வலியுறுத்தினார்.
பிரதமர் மோடி நாளை மறுதினம் முதல் 23 ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்கிறார்.
அவர் குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ‘எதிர்கால உச்சி மாநாட்டில்’ உரையாற்றுகிறார்.