உலகம்
மியான்மாரில் மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வு!
மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு போரால், மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து உள்ளதாக ஐ.நா.,சபை தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான மியான்மரில், அந்நாட்டு ராணுவத்திற்கும், பூர்வகுடிகளான காரேன் பிரிவைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
அதன்படி கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி முதல் இதுவரை 5,350 பேர் உயிரிழந்துள்ளனர் இதன் காரணமாக, மூன்று கோடிக்கும் மேற்பட்ட மக்கள், தங்கள் நாட்டை விட்டு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
மேலும் இவ்வாறு, அகதிகளாக சென்ற மக்களின் நிலை பற்றி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றதுடன் அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் ஐ.நா.,சபை தெரிவித்துள்ளது.