மத்திய கிழக்கில் பதற்றம்; இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதில் இஸ்ரேலின் மோடியின் ரயில் நிலையத்தில் சிறுபாதிப்பும் பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏமனிலிருந்து ஹைப்பர் சோனிக் ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் வான்பரப்பிற்குள் வந்த ஏவுகணையை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கிய போதிலும் ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின.
இதன்போது விரைந்து செயற்பட்ட தீயணைப்பு பிரிவினரால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த ஏவுகணை தாக்குதலின் போது காயமோ, உயிரிழப்புகளோ பதிவாகவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசமான கூறியுள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஹூடைடா துறைமுகம் மீது கடந்த ஜூலை 20 ஆம் திகதி இஸ்ரேல் விமானப்படை மேற்கொண்ட தாக்குதலில் அறுவர் உயிரிழந்தனர்.