முச்சந்தி

லசந்த- தாஜுதீன் அரசியல் காரணங்களுக்காகவே கொல்லப்பட்டனர்: முன்னாள் சிஐடி தலைவர் தகவல்

பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்கர் வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோர் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) முன்னாள் தலைவர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு ஆதரவாக குருநாகலில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

லசந்த விக்கிரமதுங்க மற்றும் தாஜுதீன் இருவரும் அரசியல் காரணங்களுக்காக படுகொலை செய்யப்பட்டனர்.

எனினும், தாஜுடீன் கொலை தொடர்பான விசாரணைகள் அப்போதைய அரசாங்கத்தால் தடைப்பட்டிருந்தன.

“எவ்வாறாயினும், இந்த படுகொலை சம்பவங்களை முறையாக விசாரிக்க பொலிஸார் அனுமதிக்கப்படவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லசந்த விக்கிரமதுங்க, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுடன் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தார்.

கோட்டாபய ராஜபக்சவின் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் ஊழல்களுக்கு எதிராக நீதிவான் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 2009 ஜனவரி எட்டாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனிடையே, வாசிம் தாஜுதீன் 17 மே 2012 அன்று கார் விபத்தில் கொல்லப்பட்டார், இது முதலில் விபத்து என்று கூறப்பட்டது, ஆனால் பின்னர் கொலையாக கருதி விசாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.