காணாமல் போன ஜனாதிபதி வேட்பாளர்கள்: விசேட ஆய்வில் வெளியான தகவல்
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கட்டுப்பணம் செலுத்திய 19 வேட்பாளர்கள் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெப்ரல் (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து விசேட ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வேட்பாளர்கள் கட்சி அலுவலகம் கூட கட்டவில்லை எனவும், பத்து வேட்பாளர்கள் மாத்திரமே தமது கொள்கைகளை முன்வைக்க நேரத்தை எடுத்துக் கொண்டுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டிய 38 வேட்பாளர்கள் முன்வந்துள்ளதாகவும், இது வரலாற்றில் அதிகூடிய வேட்பாளர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், அவர்களில் 10 பேர் மாத்திரமே தற்போது பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.