கமலா ஹாரிஸின் இனம் குறித்து ட்ரம்பின் புதிய நிலைப்பாடு: அணுகுமுறை குறித்து கவலை
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இனரீதியாக எவ்வாறு அடையாளம் காணப்பட்டாலும் அது குறித்து தான் பொருட்படுத்த போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ், எனந்த இனத்தைச் சேர்ந்தவர் என ட்ரம்ப் அண்மையில் கேள்வி எழுப்பிருந்ததுடன் கறுப்பினத்தவர் என்று தனக்கு தெரியாதென்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கமலா ஹாரிஸ் மற்றும் ட்ரம்ப் பங்கேற்கும் நேரடி விவாதம் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலடெல்பியாவில்இன்று காலை ஆரம்பமானது. இந்த விவாதம் மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்றது.
இதன்போதே மதிப்பீட்டாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்கும் போதே கமலாவின் அடையாளம் குறித்து தான் பொருட்படுத்த போவதில்லையென கூறியுள்ளார்.
ஹாரிஸின் தாய் இந்தியாவைச் சேர்ந்தவர் மற்றும் அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்தவர். எனவே ட்ரம்ப் இருவரையும் கறுப்பின மற்றும் இந்திய அமெரிக்கர் என அடையாளம் காட்டினார்.
இந்நிலையில் ட்ரம்பின் புதிய நிலைப்பாட்டிற்கு பதிலளிக்குமாறு கமலா ஹாரிஸிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “அமெரிக்க மக்களைப் பிளவுபடுத்துவதற்கு இனத்தைப் பயன்படுத்தி தனது தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முயன்று வந்த ஒருவர் ஜனாதிபதியாக விரும்புவதை குறித்து கவலையடைகிறேன்” என்றார்.
மேலும் மக்களிடமிருந்து பிரிக்க முயற்சிக்கும் இவ்வாறான அணுகுமுறையை நாங்கள் விரும்பவில்லை” என்றும் கூறினார்.