உலகம்
கனடாவில் தமிழர்கள் இருவருக்கு கிடைத்த அங்கீகாரம்: மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு பதக்கம் வழங்கி கௌரவிப்பு
கனடிய அரசாங்கம் வழங்கும் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு பதக்கத்தை – His Majesty King Charles III Coronation Medal – இருகனடியத் தமிழர்கள் பெற்றுள்ளனர்.
கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகிய கனடிய தமிழர்கள் இந்தப் பதக்கத்தை பெற்றனர்.
கனடாவிற்கும், தமது மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் அடையாளப்படுத்துகிறது.
மொத்தம் 18 கனடியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் குறித்த இரு தமிழர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிசூட்டு பதக்கம் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவை குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய அரசின் கௌரவமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் Mary Simon இந்த அங்கீகாரத்தை ஆரம்பித்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.