ரணில் முல்லைத்தீவு வருகை; தீப்பந்தப் போராட்டம்
முல்லைத்தீவில் ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தீப்பந்தப் போராட்டம் அதிகாரிகளின் தலையீட்டடால் கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரை அலுவலகத்திற்கும் முன்னால், நேற்று இரவு 7.00 மணி அளவில் ஒன்று கூடிய கட்சியின் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ,விவசாய அமைப்புகளின் பிரதிகள் மற்றும் அரசியல் பிரதிகள் உள்ளிட்ட குழுவினர் தீப்பந்தம் ஏந்தி கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.
அந்த இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த விடயம் தேர்தல் சட்டங்களுக்கு புறம்பானது இதை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
பின்னர் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் அலுவலகத்திற்கு முன்பாக ஊடக சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த வேளையில் அங்கு தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் வருகை தந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
சில அறிவுறுத்தல்களை வழங்கி விட்டு அங்கிருந்து சென்றதுடன், தொடர்ந்தும் அங்கு ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சுரேன்ராகவன் தேர்தல் நிலவரங்கள் மற்றும் இன்றைய நிலவரங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிட்டார்.
இதன் பின்னர் முல்லைத்தீவில் ஜனாதிபதி ரணிலிற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தீப்பந்நப் போராட்டம் கைவிடப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.