மூன்றில் ஒரு பங்கு சிறுவர்களுக்கு போஷாக்குக் குறைபாடு
இலங்கையில் மூன்றில் ஒரு பங்கு சிறுவர்கள் போஷாக்குக் குறைபாட்டின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதாக நாடாளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத்தீவில் சிறார் போசாக்கு குறைபாடு அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட குழு இந்த அறிக்கையை முன்வைத்துள்ளது.
இந்த அறிக்கையை குழுவின் தலைவரான இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷுக்கு பதிலாக குழு உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன சமர்ப்பித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கல்வி அமைச்சினால் தற்போது 17 இலட்சம் ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மற்றும் முன்பருவ அபிவிருத்தி நிலையங்களில் உள்ள சிறார்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும், எதிர்காலத்தில் தரம் 08க்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு உணவு வழங்குவதற்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்படும் எனவும் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு ஜூன், ஊட்டச்சத்து மாத மதிப்பீட்டிற்குப் பிறகு, நாடளாவிய ரீதியில் பொது சுகாதார மருத்துவச்சிகளில் (PHM) பதிவு செய்யப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 96.5 வீதமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, 17.1 வீதம் எடை குறைவாகவும் (வயதுக்கு ஏற்ற எடை குறைவாகவும்), 10 வீதம் வளர்ச்சி குன்றியதாகவும் (உயரத்திற்கு எடை குறைவாகவும்) மற்றும் 10.3 வீதம் வளர்ச்சி குன்றிய (வயதுக்கு ஏற்ற எடை/உயரம்) குழந்தைகளும் இந்த அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளனர்.