அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்பின் மனைவி யாருக்கு ஆதரவு?
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், டிரம்ப்பின் மனைவி மெலானியா கூட கணவர் தோற்க வேண்டும் என நினைப்பதாக முன்னாள் தகவல் தொடர்பு செயலாளர் அந்தோணி ஸ்காராமுச்சி தெரிவித்துள்ளார்.
டிரம்ப்பின் மனைவி மெலானியா கூட கமலா ஹாரிஸே வெற்றி பெறவேண்டும் என நினைப்பதாகவும் அந்தோணி ஸ்காராமுச்சி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.
அந்தோணி ஸ்காராமுச்சி தெரிவித்துள்ளதாவது, கமலா ஹாரிஸ் வெற்றியில் மெலனியா டிரம்ப் ரொம்பவே ஆர்வமாக உள்ளார்.
ஏனென்றால் கடந்த 2016, 2020 ஆண்டுகளில் டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்கு ஆதரவாக மெலானியாவும் டிரம்பிற்காக வந்து பிரச்சாரம் செய்தார். பல பகுதிகளுக்குச் சென்று பிரசார கூட்டங்களில் பேசினார். டிரம்புடன் இணைந்து பேரணிகளில் கலந்து கொண்டார். ஆனால், இந்தாண்டு மெலானியாவை எங்கும் பார்க்கவே முடியவில்லை. ஓரிரு கூட்டங்களில் மட்டும் பங்கேற்றார். டிரம்ப் தனி ஆளாகவே தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
டிரம்ப் வென்றாலும் மெலானியா வெள்ளை மாளிகைக்கு வரமாட்டார். அவர் தனது மகனைக் கவனித்துக் கொள்வதிலேயே அதிக நேரம் செலவிட நினைக்கிறார் என்றார்.
டிரம்ப் மறுப்பு: ஸ்காராமுச்சியின் கருத்துகளை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தன் மீது இருக்கும் வெறுப்பின் காரணமாகவே இதுபோன்ற ஆதாரமில்லாத பொய்யான கருத்துகளை ஸ்காராமுச்சி கூறி வருவதாகவும் டிரம்ப் சாடியுள்ளார்.
அந்தோணி ஸ்காராமுச்சியின் இந்தக் கருத்துகள் அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.