ரஷ்யாவுக்குள் சரமாரியாக ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரெய்ன்: பற்றியெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு
ரஷ்யா – உக்ரெய்னுக்கு இடையிலான போர் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் கூர்க்ஸ் உள்ளிட்ட பிராந்தியங்களை உக்ரெய்ன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இதன் காரணமாக இன்று அதிகாலை இரு கட்டங்களாக உக்ரெய்னின் தலைநகர் கீவ் மீது ரஷ்ய இராணுவம் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த ட்ரோன்களை உக்ரெய்ன் இராணுவம் தாக்கி அழித்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரெய்ன் கூறியிருந்தது.
இத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் சராதோவ் (Saratov) பகுதியில் உக்ரெய்ன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதில் 20 உக்ரெயன் ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளதாக ரஷ்ய இராணுவம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல்களினால் வானில் தகர்க்கப்பட்ட ட்ரோன்களின் பாகங்கள் சராதோவ் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் விழும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக குறித்த பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.