இலங்கையில் 30 ஆயிரம் பாலியல் தொழிலாளிகள், 80 ஆயிரம் ஓரினச்சேர்க்கையாளர்கள்: வைத்திய நிபுணர் வெளிப்படுத்திய தகவல்
இலங்கையில் தற்போது 30,000 அடையாளம் காணப்பட்ட பாலியல் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தாம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இந்த நாட்டில் பாலியல் ரீதியாக பரவும் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இலங்கையில் சுமார் 80,000 ஓரினச்சேர்க்கை ஆண்கள் இருக்கின்றனர். தேசிய பாலியல் பரவும் நோய்கள் கட்டுப்பாட்டுப் பிரிவு தனது சமீபத்திய தரவுகளில் இதனைத் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கிட்டத்தட்ட 6,000 ஓரினச்சேர்க்கை தொழிலாளர்கள் கடல்கடந்த தொழிலில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை மாணவர்களிடையே பாலியல் கல்வியை மேம்படுத்துவது அவசிம் எனவும் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் காலியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அன்பு மற்றும் பாலியல் ரீதியான உறவு என்பவற்றின் வேறுபாடுகளை அறியாத பெண்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
ஆண் பிள்ளைகளும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் மனநிலை பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் சில நேரங்களில் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகின்றனர்.
இதனால் அவர்கள் போதைப்பொருள் உள்ளிட்ட மோசமான விடயங்களுக்கு ஆளாகின்றனர்.” என மேலும் கூறியுள்ளார்.