முச்சந்தி

ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்!

38 பேர் போட்டியிடுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையகத் தமிழனாக நானும் நிற்பேன் எங்கள் மக்களுக்கும் அந்த தகுதி உள்ளது என சொல்லவருவதே எனது முதலாவது வெற்றி என ஜனாதிபதி வேட்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா,

மலையகத்தில் இந்து வந்தால் ஆயிரம் ரூபாய் அல்லது 1,700 ரூபாவை கோருவார்கள் அல்லது 1,350 ரூபாய்க்கு கீழ் இறங்கி அதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்வார்கள். வர்த்தமானி வெளியிடப்படும் மேடைகளில் பேசப்படும் ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இறுதியில் சம்பளம் மாத்திரம் கிடையாது.

எமது மக்களின் பிரச்சினை 1,700 ரூபாய் சம்பள பிரச்சினை மாத்திரம் அல்ல 1,700 ரூபாய் சம்பளத்தோடு தொடர்புடையவர்கள் ஒரு இலட்சம் அளவானவர்கள். அதற்கு அப்பால் 15 இலட்ச்சம் சனத்தொகை வாழுகின்றோம். இவர்களுக்கான பிரச்சினை பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இதனை எப்படி எந்த மொழியில் சொல்ல வேண்டும் என்பதை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை வேட்பாளராக உங்களுக்காக இலங்கையில் நடைபெற கூடிய ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரோடும் விவாதத்திற்கு தயாராக உள்ளேன்.

மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையகத்தில் ஏற்படுத்த வேண்டும். மலையகத்தில் என்ன நடக்கிறது கடந்த வாரம் ஒரு தனியார் தொலைகாட்சியில் இடம்பெற்றது. அறிவார்ந்த அரசியல் கலந்துரையாடல் அல்ல எமது தலைவர்கள் பேசிகொண்ட சொற்பிரயோகம். நாம் இதற்கா வாக்களித்தோம். யார் என்னத்தை வைத்துள்ளார்கள். இது தான் இவர்களுடைய பிரச்சினை மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்க போகின்றோம் என்பது அவர்களின் உரையாடலில் இல்லை.

பாரா அல்லது குடுவா என சாதாரண மக்கள் சண்டையிட்டு கொள்ளவில்லை எமது முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். இவர்கள் எதற்கு உரிமையாளர்கள் என்று சண்டையிட்டு கொள்பவர்கள் எமது மக்களுக்கு எந்த உரிமையை பெற்றுகொடுப்பது தொடர்பாக சண்டையிட்டு கொள்ளுவதில்லை. இவர்களின் சண்டைகள் அனைத்தும் அவர்களின் உரிமைகள் தொடர்புபட்டது என குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.