டி.எஸ் சேனாநாயக்கவின் பேரனும்; முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க காலமானார்
இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க தனது 76ஆவது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
தனது மாமா, முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து அவர் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தபோது, சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியல் மீதான ஆர்வம் ஏற்பட்டது.
அவர் 1973 இல் தெடிகம பகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்றார். ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தனது இராஜினாமாவைச் சமர்ப்பித்து, 1994 வரை மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழையவில்லை, கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக பொலன்னறுவை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
அவர் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களுக்கான கெபினட் அமைச்சராகவும் பணியாற்றினார். பின்னர் 2007 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் 2008 இல் உப தலைவராகவும் நியமிக்கப்பட்டார் என்பதும் சுட்டிககாட்டத்தக்கது.
இவரது இறுதி கிரியைகள் தொடர்பான விடயங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.