தமிழக வெற்றிக் கழக கொடிக்கு எதிர்ப்பு; யானை சின்னம் பறிபோகுமா?
தமிழக வெற்றிக்கழக கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள் அகற்றப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அந்த கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை அறிமுகம் செய்து கொடியேற்றி வைத்தார்.
சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிறங்களுடன் இரண்டு போர் யானைகள், நடுவில் வாகை மலருடன் இருக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் யானைகள் அகற்றப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கிய யானை சின்னத்தை சிக்கிம் மற்றும் அசாம் ஆகிய 02 மாநிலங்கள் தவிர யானையை வேறு எந்த மாநிலங்களும் எந்த வடிவிலும் பயன்படுத்த முடியாது என கடந்த வருடம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
தற்போது தமிழக மாநில கட்சியொன்றில் யானை இடம்பெற்றிருப்பது விதி மீறலாகும். சட்டம் அறியாமை காரணமாக தமிழக வெற்றிக்கழத்தின் முகாமையாளரிடம் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் சட்ட ஆவணங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து பரிசீலிப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்” என்றார்.
சின்னம் நீக்கப்படாவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.