முச்சந்தி

தரையில் அமர்ந்து எழும் பயிற்சி அயுளை அதிகரிக்கும்…

ஒருவர் எத்தனை ஆண்டுகளில் இறப்பார் என துல்லியமாக தெரியவேண்டு மெனில் அவர் கீழே உட்கார்ந்து எழுந்திருந்து செல்லும் பழக்கத்தை கொண்டே சொல்லலாம் என்கிறார்கள் இவர்கள்.

கீழே உட்கார்ந்து எந்த பிடிமானமும் இல்லாமல் தரையில் கையோ காலோ ஊன்றாமல் எழுந்திருக்க முடிந்தால் அவருக்கு ஆயுசு நூறு…

தரையில் இரண்டு கைகளையும் ஊன்றி அப்போதும் எழுந்திருக்க முடியாமல் உதவிக்கு ஒருவரோ இருவரோ வந்து கையை பிடித்து எழுப்பி விடும் நிலையில் இருந்தால் உடனே வக்கீலை வரவழைத்து உயிலை எழுதிவிடலாம்…

ஜெரென்டாலஜி துறை ஆய்வு ஒன்றில் முதியவர்களை கீழே அமரவைத்து எழ வைத்து ஆய்வு செய்தார்கள்..

கை முட்டி என எதுவும் தரையில் படாமல் எழுந்தால் 0 பாயிண்டு.

ஒரு கை ஊன்றி எழுந்தால் 1 பாயிண்டு. இரு கைகளை ஊன்றி எழுந்தால் 2 பாயிண்டு.

இப்படி அவர்களின் உட்காரும் பிட்னஸை கணக்கிட்டு அதன்பின் அவர்களை ஆண்டுக்கணக்கில் அப்சர்வ் செய்ததில் தெரிந்த விஷயம் எதுவென்றால்..

பாயிண்டுகள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மரண ரிஸ்க் ஒவ்வொரு பாயிண்டுக்கும் 21% கூடுகிறது என்பதுதான்…

கீழே சம்மணம் போட்டு உட்காருவது யோகாசனத்தில் சுகாசனம் என அழைக்கப்படுகிறது.

இந்தியா, சீனா, ஜப்பான் , என கிழக்காசிய நாடுகள் எங்கிலும் சுகாசன முறையில் தான் மக்கள் உட்கார்ந்து எழுகிறார்கள்…

செருப்பு போடாமல் வீட்டுக்குள் வர சொல்வதற்கும் காரணமே வீடுகளின் தரையில் மக்கள் உட்கார்வார்கள் என்பதுதான்…

கீழே உட்காருவது நாகரீகக் குறைவு என கருதி ஆயிரக்கணக்கில் விலை கொடுத்து சோபா, சேர்களை என வாங்கி முதுகுவலி, மூட்டுவலியை விலைகொடுத்து வாங்கி வைத்திருக்கிறோம்…

சோபா சேரில் நீண்டநேரம் உட்கார்ந்து எழுந்தால் முதலில் வருவது கால் மரத்து போன உணர்வு..

அடுத்து பின்புறவலி…

காரணம் சோபாவில் உட்காருவதால் பின்புற தசைகளுக்கு வேலையே கிடையாது.
பின்புறம் இப்படி இனாக்டிவாக இருப்பது தான் முதுகுவலி, மூட்டுவலி என அனைத்துக்கும் வர காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்..

கீழே உட்கார்ந்து எழும் சமூகங்களில் வயதானவர்கள் கீழே விழுந்து கையை காலை முறித்துக்கொள்ளும் அபாயம் துளியும் இல்லை என்கின்றன ஆய்வுகள்..

காரணம் அவர்கள் வாழ்வதே தரையில் தான்…

கீழே படுத்து உட்கார்ந்து எழும் போது அவர்களுக்கு சப்போர்ட்டிங் தசைகளும் எலும்புகளும் வலுவடைகின்றன. தரையில் அமர்ந்து எழும் பயிற்சி அயுளை அதிகரிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.