இலங்கை

வரலாற்றில் இதுவரை நடக்காதவை இம்முறை தேர்தலில்: 2024 ஜனாதிபதி தேர்தல் சுவாரஸ்யங்கள்

ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதித் தேர்தல் 2024 இற்கான எல்லா ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று 39 வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்

சவால் மிக்க ஜனாதிபதி தேர்தலாக இது மாற்றமடைந்துள்ள நிலையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதன் முறையாக 39 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றார்கள்.

கடந்த 20219 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்தனர். அதில் பொதுஜன முன்னணி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 41.99% வாக்குகளைப் பெற்றார்.

2024 தேர்தலில் காணப்படும் பாரதூரமான விடயம் என்ன?
வாக்குசீட்டு

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், வாக்குச் சீட்டு 27 அங்குல நீளமும் ஐந்து அங்குல அகலமும் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒற்றை நெடுவரிசையா அல்லது இரட்டை நெடுவரிசையா என்பதை தேர்தல் ஆணைக்குழு மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் ஆதாரம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், இரட்டை நெடுவரிசை வாக்குச் சீட்டாக இருந்தால், வாக்குச் சீட்டு 13.5 அங்குல நீளமும் அகலமும் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட மிக நீண்ட வாக்குச்சீட்டு இதுவாகும். பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை, கடந்த காலத்தில் எதிர்பார்த்ததை விட நீண்ட வாக்குச் சீட்டாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நீண்ட வாக்குச் சீட்டுக்கான பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய பொருட்களை அச்சிடுவதற்கு அரசாங்கம் அதிகச் செலவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டு சுமார் 25 அங்குல நீளமாக இருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

தற்போதைய ஜனாதிபதியின் நிலைப்பாடு
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார். அப்போதைய காலத்தில் இளம் வயதில் நாடாளுமன்றத்துக்கு தெரிவாகிய ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையை கொண்டவர்.

அதிகமான தடவைகள் பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கவுக்கு 2024 ஜனாதிபதி தேர்தல் மிகவும் சவால் மிக்கதாக காணப்படுகின்றது. காரணம் மிகவும் வலுவான எதிர்தரப்பினருக்கு மத்தியில் இவரது வெற்றி எவ்வாறு பிரதிபளிக்கப்படும் எனவும் சமூக ஆர்வலளர்களால் உற்றுநோக்கப்படுகின்றது.

மேலும், கடந்த 3 ஜனாதிபதி தேர்தலிகளிலும் அவர் போட்டியிடாத பட்சத்தில் 2022ஆம் ஆண்டு அரகலய போராட்டம் இலங்கையில் வலுபெற்றிருந்தது. அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை அநாதரவாக விட்டுச்சென்ற நிலையில், இலங்கையின் இரண்டாவது இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றார்.

இலங்கை வரலாற்றில் ரணசிங்க பிரேமதாச உயிரிழந்த காலப்பகுதியில் டிபி ஜயசிங்க முதலாவது இடைக்கால ஜனாதிபதியான பொறுப்பேற்றிருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கையில் ஒரு சரித்திர வரலாற்றை ஏற்படுத்தும் தேர்தல் களமாக இது அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலில் உள்ள சுவாரஸ்யம் என்ன?
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதியாக இருந்த இரு தலைவர்களின் புதல்வர்கள் இந்த 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

அதாவது, ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச மற்றும் மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதனால் இந்த தேர்தல் அனைவர் மத்தியிலும் பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் – முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி
வடக்கு – கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் ,மலைய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகாராஜ் மற்றும் அருணலு மக்கள் சார்ப்பில் கிருஷான் மற்றும் முகம்மது இல்லயாஸ், அபுபக்கர் இன்பாஸ் ஆகிய இரு முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடும் ஒரே தேர்தலாக இது அவதானிக்கப்படுகிறது.

அதிக எண்ணிக்கையிலான தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஒருவரான சிறிதுங்க ஜயசூரிய இம்முறையும் இதில் போட்டியிடுகின்றார்.

மேலும், நுவன் சஞ்சீவ போபகே அரகலயவை பிரதிநிதித்துவப்படுத்தி களமிறக்கப்பட்டுள்ளார். இவருக்கும் இத் தேர்தல் மிக முக்கிய சவாலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.