முச்சந்தி

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்; கட்டணம் விபரங்கள் அறிவிப்பு.!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பயணக்கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கப்பல் சேவை எதிர்வரும் 16ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை (Sri lanka) காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது.

அந்தவகையில் இந்தியா (India) நாகப்பட்டினத்தில் இருந்து சிவகங்கை பயணிகள் கப்பலானது வெள்ளோட்டத்திற்காக கடந்த (10) 12 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளது.

இந்த சிவகங்கை கப்பலில் சாதாரண வகுப்பில் 133 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. பயணி ஒருவருக்கு 5 ஆயிரம் இந்திய ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது, வணிக வகுப்பில் 27 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் பயணிக்க ஒருவருக்கு 7,500 இந்திய ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் இந்த கப்பலில் பயணிகளுக்கு துரித உணவுகளை கட்டணத்துடன் பெற்றுக்கொள்ள உணவக வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவர் தம்முடன் 60 கிலோ வரையான பொதியை எடுத்துச் செல்லவும் 5 கிலோ வரை கைப்பையில் எடுத்துச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம் சோதனை ஓட்டம் முடிந்த பின்னர் பயணிகள் அனுமதி சீட்டுக்களை முன்பதிவுகளை செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
16 ஆம் திகதி கப்பல் சேவை ஆரம்பம் – டிக்கெட் முன்பதிவுக்கு sailindsri.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.