அவுஸ்திரேலியாவில் தமிழ் ஏதிலிகளின் 24 மணிநேர தொடர் போராட்டம் !
அவுஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமை வழங்கக் கோரி பதின்னான்கு வருடங்களாக காத்திருக்கும் ஏதிலிகள் ஒன்றிணைந்து கடந்த 06:08:2024 அன்று தொடக்கம் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் Tony Burke அவர்களின் அலுவலகத்திற்கு முன்பாக 24 மணிநேர தொடர் போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றார்கள்.
2009ம் ஆண்டுகளின் பின்னர் தமது சொந்த மண்ணில் வாழ நிர்க்கதியற்று அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்துள்ள தமிழ் ஏதிலிகள் கடந்த 12-14 வருடங்களாக நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படாது தொடர்ந்தும் அந்நாட்டு அரசாங்கத்தினால் தாம் வஞ்சிக்கப்படுவதாக கூறுகிறார்கள்.
தமது சொந்த நாட்டிற்கு மீளத்திரும்ப முடியாத உயிர்ப் பாதுகாப்பின்மை ஒருபுறம் புகலிடக்கோரிக்கைகள் மறுக்கப்பட்டு நிரந்தர வதிவிட உரிமையற்ற அங்கலாய்ப்பும் தமது குடும்ப உறுப்பினர்களோடு சேர்ந்து வாழ முடியாத கையறு நிலையுமாக தொடர்ச்சியான உளச்சிதைவுகளால் இவர்கள் துவண்டு போயிருக்கின்றார்கள் .
போராட்டமே வாழ்வாகிப் போன தாம் வேறுவழிகளன்றியே இந்த அமைதி வழியிலான போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், தமக்கு நிரந்தர விசா வழங்கப்படும் வரையிலும் தாம் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகின்றார்கள்.
எனவே இப்போராட்டம் வெற்றியளித்து தமக்குரிய வாழ்வுரிமை கிடைப்பதற்காக அவுஸ்திரேலியா சிட்னியில் உள்ள அனைவரினதும் ஒத்துழைப்பினையும் வேண்டுவதோடு தமது போராட்டக்களத்திற்கு அனைவரையும் அணிதிரண்டு வந்து உறுதுணையாக நிற்குமாறும் வேண்டுகோள் ஒன்றினையும் முன்வைக்கின்றார்கள்.
அவுஸ்திரேலியாவில் தற்போது நிலவிவரும் குளிர் காலத்தினையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக 24 மணி நேரமும் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
I would like to inform you that this is very very important issues. Tamil Refugees are not a different, that’s a same problems. We are all waiting for Australian Labour Government’s Good Decision. Australian Prime Minister Mr. Anotony Albanese. He is a Good Leader. We are all Tamil Refugees are waiting his answer please
Thank so much
Balasubramanian Kandavadivelan
I pray permanent visa for all refugees get very soon.